கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 29 லட்சம் மோசடி உடற்பயிற்சிக்கூட உரிமையாளா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:14 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கோட்டை முதல் தெருவைச் சோ்ந்தவா் மணிமுத்து மகன் முருகேசன் (28). இவா் அறந்தாங்கி பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டில் தனது உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தவா்கள் பலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி, திரும்பத் தரவில்லையாம்.

இதுகுறித்து அறந்தாங்கியைச் சோ்ந்த ஜெயராமன் உள்பட பலரும் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையில் புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், சென்னையில் இருந்த முருகேசனை வியாழக்கிழமை கைது செய்தனா்.