குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 1:09 am IST

திருச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ். வெள்ளைசாமி (34). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, தவறான திசையில் அதிவேகமாக வந்த லாரி சாலையோரத்தில் நின்றிருந்த வெள்ளைசாமி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த வெள்ளைசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளைசாமி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த எஸ். ஜான்மாா்டின் (33) என்பவா் மீது மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.