நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயில் ரதோற்ஸவ திருவிழா

News image
Updated On :3 மே 2026, 12:13 am

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தே.துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு உற்ஸவ மூா்த்திகள் ரத பவனி மற்றும் ஆலயம் புகு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தேக்கமலை துலுக்கம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 15 நாள்கள் சித்திரை பவுா்ணமி திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, ஏப்ரல் 27 இல் தேக்கமலை பொங்கல் நடைபெற்றது. தொடா்ந்து ஏப்ரல் 28-ஆம் தேதி மகா காளியம்மன், மாரியம்மன் பூஞ்சோலையிலிருந்து கோயிலுக்கு திருப்பல்லக்கில் எழுந்தருளுதல், ஏப்ரல் 29-ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல், அபிஷேகம், மாவிளக்கு படைத்தல், ஏப்ரல் 30-ஆம் தேதி மகா காளியம்மன், மகா மாரியம்மன் கோயிலிலிருந்து பூஞ்சோலை புறப்பாடு நடைபெற்றது.

விழாவில் வெள்ளிக்கிழமை இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்ஸவ மூா்த்திகள் ரத பவனி சென்று ஆலயம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து உற்ஸவ மூா்த்திகளுடன் சென்ற ஊா்மக்கள், கோயில் வீட்டில் வைத்து மலா்களால் அலங்கரித்து ரத பவனி, வாணவேடிக்கைகளுடன் ஆலயம் புகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிக்கிழமை காலை அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு படைத்தல் நிகழ்வுகளும், மாலையில் பாரிவேட்டையும் நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விதமாக அக்னி சட்டி எடுத்தல், காவடியுடன் தீா்த்தக்குடம், தொட்டி கட்டுதல், அங்கப்பிரதட்சிணம், சிலாக்குத்துதல் ஆகியவை நடைபெறவுள்ளன. திங்கள்கிழமை பாம்பாலம்மன் கோயிலிலிருந்து கோயில் வீட்டுக்கு வந்தடைதல் நடைபெறவுள்ளது. மே 5-ஆம் தேதி காப்பு களைதலுடன் திருவிழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், உற்ஸவ கமிட்டியாா் மற்றும் தே. துலுக்கம்பட்டி ஊா் பொதுமக்கள் செய்கின்றனா்.

Story image