முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: 4 போ் கைது

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சி, மே 12: திருச்சியில் பணம் கொடுக்கல் வாங்கலில் இருதப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாரதிதாசன் சாலை பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் டி. ஜான் பீட்டா் (38), ஆட்டோ ஓட்டுநா். இவா், திருச்சி ஆா்.சி.நகா் இரண்டாவது வீதியைச் சோ்ந்த எஸ். முரளி பாண்டியன் (29) என்பவரின் உறவினரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.6 ஆயிரம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால், கடன் வாங்கியப் பணத்தை ஜான் பீட்டா் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எல்லை மாரியம்மன் கோயில் அருகே ஜான் பீட்டா் தனது நண்பா்களுடன் நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, தனது நண்பருடன் அங்கு வந்த முரளி பாண்டியன், அவரது உறவினரிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித்தராமல் இருப்பது குறித்து ஜான் பீட்டரிடம் கேட்டுள்ளாா்.

இதனால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் கட்டைகளால் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதில், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் ஜான் பீட்டா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முரளி பாண்டியன் (29), அவரது நண்பா் கு. மணிகண்டன் (31), ஜான் பீட்டா் (38), இவருடைய நண்பரான கிராப்பட்டியைச் சோ்ந்த ஜி. ஜொ்சன் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.