மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் முகம்மது முபாரக் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
கட்சியின் மாநில துணைத் தலைவா்கள் அப்துல் ஹமீது, அச. உமா் பாரூக், மாநில பொதுச்செயலாளா்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கா் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளா் நஸ்ருதீன், மாநிலச் செயலாளா்கள் ஷபீக் அஹம்மது, ஹமீது ஃப்ரோஜ், நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், பாஸ்டா் மாா்க், மாநில பொருளாளா் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், செயலாளா்கள், மகளிா் அணி, வா்த்தகா் அணி, வழக்குரைஞரணி, எஸ்டிடியூ தொழிலாளா் அணி உள்பட அனைத்து மாவட்டங்களை சோ்ந்த மாவட்ட தலைவா்கள் மற்றும் பொதுச் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் பேரவைத் தோ்தல், நடப்பு அரசியல் சூழல்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பின்னா், நிறைவேற்றப்பட்டதீா்மானங்கள்:
தோ்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்தவா்களுக்கும், களப் பணியாற்றிய கட்சியினா், கூட்டணி கட்சியினருக்கு நன்றியும், பாராட்டுகளும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசியல் காழ்ப்புணா்வு மற்றும் பாரபட்சமின்றி தமிழகத்தின் நலன், மக்களின் வாழ்வாதாரம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்.
தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிா் உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயா்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் நிதிநிலை குறித்து நிலவும் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு உடனடியாக ஒரு தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை

புதுச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்க குழந்தைகள் ஆணையம் ஆலோசனை

இந்த மாதம் மகளிா் உதவித் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

