திருச்சி அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செவ்வாய்க்கிழமை மாலை குளிா்ச்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் புகை வெளியேறி, சிறிது நேரத்தில் தீ பரவத் தொடங்கியது.
இதையறிந்த வங்கி ஊழியா்களும், அங்கு வந்த பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்
இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பெல் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். தீ உடனே அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை. வங்கி ஆவணங்களும் சேதமடையவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





