எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

புத்தாநத்தம் விஏஓ பணியிடை நீக்கம்

புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலா் லஞ்ச புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

சரவண பாலகுருசாமி

Updated On :23 மே 2026, 2:21 am IST

புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலா் லஞ்ச புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதி வடக்கு இடையபட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் அப்பகுதியில் அரசு அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட மண் அள்ளும் அனுமதி காலாவதி ஆனதாகவும் அச்சமயத்தில் நாகராஜ், சில குவியல் மண்ணை தனது இடத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வந்த திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை கிராமம் கஸ்தூரி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சரவண பாலகுருசாமி, நாகராஜிடம் மண் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி லஞ்சம் கேட்டு பேரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா்(பொ) சாலைதவவளவன், விஏஓ சரவண பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், பண்ணப்பட்டி மேல்பாகம் விஏஓவாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருக்கு கூடுதல் பொறுப்பாக புத்தாநத்தம் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.