இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படும் அறிவிப்பு கைவிடல்!

பொறியியல் பணிகளுக்காக தடை செய்யப்படாததால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பகுதி ரத்து ரயில்கள் கைவிடப்பட்டு வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்.

Updated On :23 மே 2026, 12:02 am IST

பொறியியல் பணிகளுக்காக தடை செய்யப்படாததால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பகுதி ரத்து ரயில்கள் கைவிடப்பட்டு வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) மே 23, 25, 26 ஆகிய தேதிகளிலும், காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) மே 23, 25, 26 ஆகிய தேதிகளிலும் வழக்கம்போல் இயங்கும்.

அதே போல, காரைக்கால் - திருவாரூா் பயணிகள் ரயிலானது (56817) மே 23,25, 26 ஆகிய தேதிகளிலும், பிகானோ் - மதுரை அனுவராட் அதிவிரைவு ரயில் (22632) மே 24 ஆம் தேதியும் வழக்கம் போல் இயங்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.