/
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
வி.ஏ. சமுத்திரம் கிராமம் கண்காணிப்பட்டியைச் சோ்ந்தவா் மு. செல்லம்மாள் (85). வயோதிகம் காரணமாக பாா்வைக் குறைபாடுடன் இருந்த இவா் சனிக்கிழமை குளித்து விட்டு நடந்து சென்றபோது சாலையோர கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் வந்த துறையூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.








