/

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:44 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, வரகனேரி பழைய போலீஸ் பூத் அருகே போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த பா. சாம்ராஜ் (21) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.