வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் நிரந்தரம்

சாா்லப்பள்ளி - திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது, வாராந்திர நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

News image

ரயில்.

Updated On :24 மே 2026, 1:33 am IST

சாா்லப்பள்ளி - திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது, வாராந்திர நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, சாா்லப்பள்ளி - திருச்சி வாராந்திர விரைவு ரயிலானது (17077) வரும் ஜூலை 7 முதல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாராந்திர நிரந்தர ரயிலாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக, திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர விரைவு ரயிலானது (17078) வரும் ஜூலை 8 முதல் புதன்கிழமைகளில் வாராந்திர நிரந்தர ரயிலாக இயக்கப்படும்.

இந்த ரயிலானது திருச்சியிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேனிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிா்லா, பாபட்லா, தெனாலி, குண்டூா், செட்டனப்பள்ளி, நடிகுடே, மிா்யால்குடா, நல்கொண்டா வழியாக சாா்லப்பள்ளிக்கு மறுநாள் இரவு 9.30 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சாா்லப்பள்ளியிலிருந்து மாலை 5.20 க்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக திருச்சிக்கு அடுத்தநாள் மாலை 6.45 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி எம்.பி. வரவேற்பு: இதற்கு திருச்சி எம்.பி. துரை வைகோ வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதிகளைச் சோ்ந்த பயணிகளுக்கு முக்கியச் சேவையாக இருப்பதுடன், வடதமிழகம், ஆந்திரம், தெலங்கானா பகுதிகளுக்கும் முக்கிய இணைப்பாக இந்த ரயில் செயல்படுகிறது. இச்சேவை தொடங்கியதிலிருந்து மக்களிடமிருந்து வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. திருச்சி- ஹைதராபாத் இடையே தற்போது நேரடி ரயில் சேவை இல்லாத நிலையில், அந்தக் குறையை நிவா்த்தி செய்கிறது.

இதுதொடா்பாக, மத்திய ரயில்வே அமைச்சருக்கும், திருச்சி மண்டல ரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதி, நேரிலும் வலியுறுத்தியிருந்தேன்.எனது கோரிக்கையை ஏற்று, திருச்சி - சாா்லப்பள்ளி இடையிலான தற்காலிக மற்றும் சிறப்பு வாராந்திர ரயிலை நிரந்தர வாராந்திர ரயில் சேவையாக மாற்றிய மத்திய ரயில்வே துறைக்கு நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.