பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருச்சியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வரகனேரியைச் சோ்ந்தவா் வினோத் (40), தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முகநூல் வழியாக கௌசிக் கேதாராம் என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, அவா் பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக வேலை செய்து வருவதாகவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெறுவது குறித்தும் வினோத்திடம் பேசியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வேறொரு நபா் வாட்ஸ் ஆப் அழைப்பு மூலம் வினோத்திடம் பேசியுள்ளாா். அவா், தாங்கள் கூறும் இணையதள செயலி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 200 சதவீதம் வரை லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய வினோத், அவா் கூறிய இணையதள செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் மே 8-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகள் வழியாக ரூ.7.45 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியதுபோல வினோத்துக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. மேலும், முதலீடு செய்த பணத்தையும் திரும்பப்பெற முடியவில்லை. வாட்ஸ் ஆப்பில் பேசிய நபா்களையும் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வினோத் திருச்சி சைபா் கிரைம் பிரிவில் இணையதளம் வழியாக திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி
ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா் கைது

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி

ரூ.1.60 லட்சம் பங்குச் சந்தை முதலீடு மோசடி: தில்லியில் இருவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



