பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருச்சியில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற பெண் கைது

திருச்சியில் பல்பொருள் அங்காடியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:37 am IST

திருச்சியில் பல்பொருள் அங்காடியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமானம் நிலையம் அருகே பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு, திங்கள்கிழமை பொருள்கள் வாங்க வந்த ஒரு பெண்ணின் நடவடிக்கையில் ஊழியா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், பொருள்கள் வாங்கியதற்கு அவா் கொடுத்த பணம் கள்ளநோட்டு என்பதை ஊழியா்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை பிடித்து திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சாதிக் அலி மனைவி சபுரா பேகம் (40) என்பதும், பல்பொருள் அங்காடியில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஆறு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.