தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரியலூரில் குறைதீர் கூட்டம்: ரூ.2.23 கோடியில் நலத் திட்ட உதவிகள்

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 2.23 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

Updated On :

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 2.23 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

கூட்டத்தில், அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம் வட்டங்களைச் சேர்ந்த 329 பயனாளிகளுக்கு ரூ. 32.90 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா தையல் இயந்திரங்கள், கீழப்பழூவூர், திருமழபாடி, பெரியதிருக்கோணம், அழகாபுரம், மருதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில், 223 உறுப்பினர்களுக்கு ரூ. 59.94 லட்சம் பயிர்க்கடனுக்கான காசோலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 20 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 50.19 லட்சம் கடனுதவிக்கான காசோலை, புதுவாழ்வு திட்டத்தின் சார்பில், 43 மகளிர் குழுக்கள் மற்றும் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடிக் கடனுதவி ரூ. 80.30 லட்சம், 6 குறுவட்டங்களைச் சேர்ந்த 16 பேருக்கு உட்பிரிவுக்கான ஆணை என மொத்தம் 664 பயனாளிகளுக்கு ரூ. 2.23 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தனிநபர் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற ஆட்சியர், அவற்றின்மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் எல்.வி. சந்திரசேகரன், செல்வராஜ், கூட்டுறவு சார் பதிவாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.