அரியலூர் லிங்கத்தடிமேடி சித்தசக்தி அருட்ஜோதி வள்ளலார் கல்வி நிலையத்தில் வள்ளலாரின் 195 ஆவது அவதார தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, அந்த கல்வி நிலையத்தின் தலைவர் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கணேசன் செட்டியார், நடராஜன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் இளங்கோவன், ரோவர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன், தயவு நிறை சுப்ரமணிய அடிகளார் ஆகியோர் பங்கேற்று, வள்ளலாரின் பிறப்பு மற்றும் அவரின் சேவைகளை மக்களிடம் எடுத்துரைத்தனர்.
விடுதி நுழைவுக் கதவு, விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சரவணவேலு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரம் உயர பொற்றோர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.சௌந்தராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.