அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்,ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏப்.21 முதல் 25 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
6,7,8 வகுப்புகளில் திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று,கல்வி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளுக்காக கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம் காலை 6.45 முதல் 9.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமுக்கு விளையாட்டு உடையில் வர வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பங்கேற்போருக்கு முட்டை , பால் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 7401703499 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








