ஜயங்கொண்டம் ராயல் சென்டினியல் அரிமா சங்கம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச சிறப்பு எலும்பியல் மருத்துவ முகாம் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ராயல் சென்டினியல் அரிமா சங்கத் தலைவர் எம்.கே.ஆர். சுரேஷ் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் கே. சண்முகம், செயலர்கள் அறிவழகன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை அரிமா சங்க மண்டலத் தலைவர் கே. சிவகுமார் தொடக்கி வைத்தார். முகாமில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் பார்த்திபன், செந்தில்குமார் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்று 290 நோயாளிகளுக்கு பரிசோதனைகளைச் செய்தனர். இவர்களில் 30 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அரிமா சங்க நிர்வாகிகள் அன்பரசன், சரவணக்குமார், கலியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்






