அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாலுவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பணியின்போது
உயிரிழந்தார். இவரின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், பாலுவின் உருவப்படத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர் மூர்த்தி, செயலர் நடராஜன், பொருளாளர் பத்மநாபன்,நிர்வாகி ஜெயராமன் உள்பட பலர் தூவி,வீரவணக்கம் செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






