திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகேயுள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:49 am

DIN

அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகேயுள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததும், சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், நந்தியம்பெருமாள் சுயசாம்பிகை தேவியரும் திருமணம் கொண்டருளியதுமானதுமான திருமழபாடி வைத்தியசுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அனிதா மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.