அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு இயந்திர மையம் அமைக்க மானியம்

அரியலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி விவசாய இயக்கத்தின் கீழ் வேளாண் விளைபொருள்கள் மதிப்பு

Updated On :22 அக்டோபர் 2018, 3:54 am

அரியலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி விவசாய இயக்கத்தின் கீழ் வேளாண் விளைபொருள்கள் மதிப்பு கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாட்டில் நிலத்தடி மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் 2016 முதல் 2020 வரையில் 1,000 ஹெக்டேர் கொண்ட மானாவாரி நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் ரூ.802.90 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் நிதியாண்டில் மானாவாரி தொகுப்புகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல், விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்தத் தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
மீதம் உள்ள 25 சதவீதத் தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழுவின் பங்களிப்பாக செலுத்தப்படும். 
இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 2 ஆம் கட்டமாக 150 மதிப்பு கூட்டு இயந்திர மையங்களை அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 3 மதிப்பு கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மதிப்பு கூட்டும் இயந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழு விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, அரியலூர் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.