அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே திங்கள்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த 37 பேரில் 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், குந்தபுரத்தைச் சேர்ந்த 37 பேர் கீழப்பழுவூர் அருகிலுள்ள வைப்பம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சுமை ஆட்டோவில் திங்கள்கிழமை சென்றனர்.கீழப்பழுவூர் அருகே ஜயங்கொண்டம் சாலையில் எதிர்பாராதவிதமாக சுமை ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோவிலிருந்த 37 பேரும் காயமடைந்தனர்.
இவர்களில் இளஞ்சியம் (52),சிவமாலை (50) தனச்செல்வி(50), நீலாவதி(55), கமலா(59) உட்பட 6 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுகின்றனர். மற்ற 31 பேர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளஞ்சியம்,சிவமாலை ஆகிய 2 பெண்கள் அங்கு கிசிசை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். கீழப்பழுவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது: அன்புமணி

திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

பிகாா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லியில் கைது

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
