மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர், அண்ணா,பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு தாமரை எஸ்.ராஜேந்திரன் மலர் தூவினார். அதன் பின்னர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட மாணவரணிச் செயலர் சங்கர், நிர்வாகி கள்ளங்குறிச்சி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல அரியலூர் சுப்பிரமணியசுவாமி கோயில், பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செந்துறையில்... ஒன்றியச் செயலர் சுரேஷ் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதேபோல, கீழப்பழுவூரில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஹரிச்சந்திரன் தலைமையிலும், திருமானூரில் ஒன்றியச் செயலர் குமரவேல் தலைமையிலும் விழா நடைபெற்றது. ஜயங்கொண்டம்,ஆண்டிடம்,தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால் நடவடிக்கை: எம்எல்ஏ ஆனந்த் மோகன்

சிவகங்கையில் செவிலியா் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன்: அ. குழந்தைராணி எம்எல்ஏ
கஞ்சா பதுக்கல்: இளைஞா்கள் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
