அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

அரியலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:50 am IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர், அண்ணா,பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு தாமரை எஸ்.ராஜேந்திரன் மலர்  தூவினார். அதன் பின்னர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட மாணவரணிச் செயலர் சங்கர், நிர்வாகி கள்ளங்குறிச்சி பாஸ்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல அரியலூர் சுப்பிரமணியசுவாமி கோயில், பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செந்துறையில்... ஒன்றியச் செயலர் சுரேஷ் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதேபோல, கீழப்பழுவூரில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஹரிச்சந்திரன் தலைமையிலும், திருமானூரில் ஒன்றியச் செயலர் குமரவேல் தலைமையிலும் விழா நடைபெற்றது.  ஜயங்கொண்டம்,ஆண்டிடம்,தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.