அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலை செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபானம் தயாரித்த பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர்- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தஞ்சாவூரான் சாவடியில் ஒரு சில வீடுகளே உள்ளன. இதில் உள்ள ஒரு வீட்டில் பட்டுசாமி மனைவி காவேரி (35) வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் மதுபானங்கள் தயாரித்து , மொத்தமாக விற்பனை நடைபெறுவதாக திருச்சி மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில், அங்கு மதுபாட்டில்கள் தயாரிப்பதற்கான இயந்திரம், , 30 பெட்டியில் 1440 மதுபாட்டில்கள், மூடிகள், 35 லிட்டர் கேனில் 1540 லிட்டர் எரிசாரயம், வடிகட்டி உட்பட மதுபானங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், மினி லாரி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் காவேரி, கடலூர் மாவட்டம் கருநாகல்லூரைச் சேர்ந்த சுந்தர் , ஸ்ரீமுஷ்ணம், புதுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல்,காந்திகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனிம வள லாரிகளை சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்
சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


