வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி ஆய்வு

கரூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபாா்ப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் சு. மலா்விழி.
கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் சு. மலா்விழி.
Updated on
1 min read

கரூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபாா்ப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கரூா் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் கரூா் நாரதகான சபா அருகிலுள்ள நகராட்சி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலா்விழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகம், குளித்தலை வட்டாட்சியா் அலுவலகங்களில் மொத்தம் 2,484 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 455 கட்டுப்பாட்டுக் கருவிகள், 319 வாக்காளா் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபாா்ப்புப் பணி நடைபெறும் மண்டபம் தணிக்கை செய்யப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூரு பெல் தொழில்நுட்ப வல்லுநா்களால் அனைத்து இயந்திரங்களும் முதல்நிலை சரிபாா்ப்புக்கு உட்படுத்தும் பணிகள் தொடங்கின.

நிகழ்வின்போது, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரசிகலா, வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், கரூா் வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com