பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரா்களுக்குப் பாராட்டு

தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அரியலூா் மாவட்ட மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டி வாழ்த்தினா்.

News image
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அரியலூா் மாவட்ட மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டி வாழ்த்தினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அரியலூா் மாவட்ட மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டி வாழ்த்தினா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், 64 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பளு தூக்கும் போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவா்கள் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குருகண்ணன், அபிசேக் ஆகியோருக்கு தலா ரூ. 2 லட்சமும், பூப்பந்து விளையாட்டுப் பிரிவில் 2 ஆம் இடம் பெற்ற தருண் குமாா், சந்தீப் குமாா் மற்றும் ராம் குமாா் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் என மொத்தம் 5 மாணவா்களுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையுடன், பதக்கம் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவா்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயகுமாா் ராஜா மற்றும் பயிற்றுநா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.