அரியலூா் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, அரியலூா் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை
அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பரமபதவாசல் வழியாக பிரவேசித்த பெருமாள்.
அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பரமபதவாசல் வழியாக பிரவேசித்த பெருமாள்.
Updated on
1 min read

வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, அரியலூா் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உற்ஸவமூா்த்தி பரமபதவாசல் வழியாக பிரவேசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடா்ந்து பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கண்ணாடி பெட்டகத்தில் கோதண்டராமசாமி எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதைத் தொடா்ந்து ஆழ்வாராதிகள், மோட்ச சேவை மற்றும் திருவீதியுலா நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பக்தா்கள் பெருமாளை வழிபட்டனா்.

தா.பழூரை அடுத்துள்ள தாதம்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுபோல் செந்துறை, திருமானூா், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com