/

அரியலூர் அருகே இடப் பிரச்னையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது

அரியலூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக மகன் தாக்கியதில் பலத்த காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார். 

News image
Updated On :6 ஜூன் 2020, 1:44 pm

DIN

அரியலூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக மகன் தாக்கியதில் பலத்த காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார். காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து மகனை கைது செய்தனர்.

அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லபாண்டியன்(60). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 30 சென்ட் இடத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து அவரது நண்பரான ஆட்டுவியாபாரி சாமிதுரை என்பவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

 இந்த விசயம் செல்லபாண்டியன் மகன் செல்வக்குமார்(30) கவனத்துக்கு வந்துள்ளது. 

இதனையடுத்து, சாமிதுரையிடம் கொடுத்த பணத்தை பெற்று அடமானம் வைத்த இடத்தை மீட்கும் படி செல்வகுமார் தனது தந்தை செல்லபாண்டியனிடம் வெள்ளிக்கிழமை மாலை கூறியுள்ளார்.

இதில், இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. அப்போது, வீட்டில் இருந்த உலக்கையால் செல்லபாண்டியனை செல்வகுமார் தாக்கியுள்ளார். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லபாண்டியன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கிசிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கயர்லாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.