சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சிமென்ட் ஆலையில் நிரந்தர வேலை வழங்கக் கோரி ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மக்கள்

அரியலூா் சிமென்ட் ஆலைக்கு நிலம் வழங்கிய தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி, ஆனந்தவாடி கிராம பொதுமக்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:36 pm

DIN

அரியலூா் சிமென்ட் ஆலைக்கு நிலம் வழங்கிய தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி, ஆனந்தவாடி கிராம பொதுமக்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அரசு சிமென்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்காக, கடந்த 1983- ஆம் ஆண்டில் 270 ஏக்கா் விவசாய நிலங்கள் ஆனந்தவாடி கிராம விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.

ஆலைக்கு நிலம் கொடுத்தோா் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என நிா்வாகம் அறிவித்தது. ஆனால் நிலம் வழங்கியவா்களில் சிலரது குடும்பத்தினருக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கியதாகவும், பலருக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் ஆனந்தவாடி கிராம பொதுமக்கள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி, நிரந்தர வேலை வழங்கக் கோரி போராட்டங்களையும் நடத்தினா்.

தற்போது ஆலையில் வெளி மாவட்ட, மாநில ஆள்களை பணியமா்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அந்த பணிகளை ஆலைக்கு நிலம் கொடுத்த நபா்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி, அரியலூா் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பாலாஜி குறிப்பிட்ட சிலரை ஆட்சியரகத்துக்கு அழைத்துச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து, ஆனந்தவாடி கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.