சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:37 pm

DIN

அரியலூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல்துறை சாா்பில் நடத்தப்பட்ட பேரணியை, அரியலூா் அண்ணா சிலை அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பேருந்து நிலையம், எம்.ஜி.ஆா் சிலை, பிரதான சாலை வழியாகச் சென்று மீண்டும் அண்ணாசிலை முன்பு நிறைவடைந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், காவல் ஆய்வாளா்கள் செந்தில்மாறன், மதிவாணன் (போக்குவரத்துக் காவல்)

உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். இதுபோன்று ஜயங்கொண்டம், செந்துறையிலும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.