நீட் தேர்வால் மாணவர் தற்கொலை: ஜெயங்கொண்டத்தில் கிராம மக்கள் போராட்டம்
நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த அரியலூர் மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த அரியலூர் மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
செந்துறை அருகேயுள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், தமிழ்ச்செல்வி தம்பதிக்கு விக்னேஷ்(19),வினோத்(16) என இரு மகன்கள் உள்ளனர். விஸ்வநாதன் பெட்டி கடை வைத்துள்ளார்.
இவர்களது மூத்த மகன் விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்று கடினமாக படித்து வந்துள்ளார். செந்துறை தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த விக்னேஷ் ஆண்டு பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அதன் பின்னர் கேரளத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும், திருச்சி துறையூர் நீட் தேர்வு மையத்திலும் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த விக்னேஷ், 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் ஒரு முறை தோல்வியும், ஒரு முறை தேர்ச்சியும் பெற்ற நிலையிலும் மருத்துவர் சீட் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் விக்னேஷ் 3 ஆவது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்துள்ளார். 13 ஆம் தேதி தேர்வு எழுத இருந்த நிலையில்,இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராக முடியுமா என்று கடந்த இரு நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதன்கிழமை பிற்பகல், ஊரிலுள்ள கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்த போது விக்னேஷ் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த செந்துறை காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த கிராம மக்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...