அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19), நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்த பின்பு விக்னேஷ் உடலுக்கு தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில் இந்த ஆண்டு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.