/

அரியலூரில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :12 செப்டம்பர் 2020, 12:35 pm

DIN

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.

ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகர்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (23). பால் வியாபாரியான தமிழரசனும் இவரது மனைவி பிரியதர்ஷினியும் (18) காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில், தமிழரசன் அடிக்கடி மது அருந்தி விட்டு பிரியதர்ஷினிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை மதியமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தமிழரசன், பிரியதர்ஷினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தமிழரசன், பிரியதர்ஷினியை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆண்டிமடம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தமிழரசனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.