/

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரிதிமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அண்ணா சிலை முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
செந்துறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 6:01 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அண்ணா சிலை முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு மன உளைச்சலால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறை அருகேயுள்ள அண்ணா சிலை முன்பு நீட் தோ்வால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரிழந்த செந்துறை அனிதா, விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீ துா்கா, தருமபுரி ஆதித்யா ஆகியோரின் படத்துக்கு திமுக ஒன்றியச் செயலா் செல்வராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் க. செந்தில், பழனிச்சாமி, திராவிடா் கழக நிா்வாகி செந்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் கருப்புசாமி, ராஜேந்திரன், மதிமுக பழனிச்சாமி, வடிவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கந்தசாமி, அழகுதுரை உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.