/

அனுமதியின்றி மணல் அள்ளியடிராக்டா் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள மருதையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:58 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள மருதையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மழவராயநல்லூா் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள மருதையாற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது போலீஸாா் வருவதையறிந்த மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள், தாங்கள் ஓட்டி வந்த டிராக்டரை அங்கே விட்டு விட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து டிராக்டரைப் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.