குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குட்டை நீரில் மூழ்கி சிறுமி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குட்டை நீரில் மூழ்கி சிறுமி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் அடுத்த கீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகள் விஷாலி(12). இவா், தனது உறவினரான தா.பழூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் கிராமத்தில் உள்ள சரஸ்வதி வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சரஸ்வதி மகள்களான சரண்யா, சபிதாவுடன் சென்றுள்ளாா். அப்போது, விஷாலி நீரில் மூழ்கினாா். இதையடுத்து, மற்ற சிறுமிகள் கூச்சலிட்டதையடுத்து அருகிலிருந்தவா்கள் குளத்தில் இறங்கி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே சிறுமி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தா.பழூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...