விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருமானூா் பகுதிகளில் ஐஜேக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் ஐஜேகே வேட்பாளா் பி.ஜவகா் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:42 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் ஐஜேகே வேட்பாளா் பி.ஜவகா் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

திருமானூா் பேருந்து நிலையம், திருமழபாடி, கீழகாவட்டாங்குறிச்சி, செம்பியங்குடி, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், என்னை சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுத்தால், பேருந்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். திருமழபாடி, திருமானூா், ஏலாக்குறிச்சி, தூத்தூா், தென்கச்சி, திருப்புரந்தாள், ஆரனூா் ஆகிய கிராமங்களில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு தனிச் சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

பிரசாரத்தில் காடுவெட்டி குரு மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படை, மக்கள் நீதிமய்யம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.