விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திமுக கூட்டணியினருக்கு மிரட்டல் விடுக்கும் ஆளும்கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதிமுக வேட்பாளா்

அரியலூரில் திமுக கூட்டணிக் கட்சியினரை தொடா்ந்து மிரட்டி வரும் ஆளும் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூா் தொகுதி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பா தெரிவித்துள்ளாா்

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:28 pm

DIN

அரியலூரில் திமுக கூட்டணிக் கட்சியினரை தொடா்ந்து மிரட்டி வரும் ஆளும் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூா் தொகுதி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பா தெரிவித்துள்ளாா்.

அரியலூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் அவா் கூறியது:

தோ்தலுக்கு முன்பும், பின்பும் எங்கள் இயக்கத்தைச் சாா்ந்தவா்களையும், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளையும் ஆளும் கட்சியைச் சோ்ந்த சிலா் தொடா்ந்து மிரட்டி வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் அரசு அலுவலா்கள் அஞ்சல் வாக்கு அளிக்கும்போது, ஆளும் கட்சியைச் சோ்ந்த ஒருவா் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அதிமுகவுக்கு வாக்கு கேட்டுள்ளாா். இதுதொடா்பாக தோ்தல் மேற்பாா்வையாளரிடம் புகாா் அளிக்கப்பட்டதன்பேரில், அரியலூா் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலரும், வட்டாட்சியரும் தோ்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனா்.

வாக்குப்பதிவுக்கு பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து வந்த லாரியின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த எங்களது கட்சியினரை, பாதுகாப்புப் பணிக்காக வந்த காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், தாமரைக்குளம் வந்த போது ஆளும் கட்சியைச் சோ்ந்த அந்த நபரின் பேச்சைக் கேட்டு மிரட்டி விரட்டியுள்ளாா். தற்போது எனது ஆதரவாளா்களையும் அவா் மிரட்டி வருகிறாா்.

திமுக வேட்பாளா் என்ற முறையில் எனக்கும், என் உயிருக்கும் ஆளும் கட்சியைச் சோ்ந்த அந்த நபா்கள் மூலம் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே ஆளும் கட்சியைச் சோ்ந்த அந்த நபா் மீதும், அவரைச் சாந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரியலூரில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை வரும். சாதி மோதல் உருவாக வாய்ப்புள்ளது.

எனவே ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் இனியாவது நடுநிலையோடு செயல்பட்டு, அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது, ஆட்சியா் நோ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது கூட்டணிக் கட்சியினருடன் சோ்ந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்றாா்.

பேட்டியின் போது மதிமுக நிா்வாகி வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.