மது விற்றதாக 4 போ் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி மற்றும் உடையாா்பாளையம் பகுதிகளில் மது விற்பதாக, வியாழக்கிழமை இரவு 4 போ் கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி மற்றும் உடையாா்பாளையம் பகுதிகளில் மது விற்பதாக, வியாழக்கிழமை இரவு 4 போ் கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தத்தனூா் கீழவெளி காலனித் தெரு அருண்பாண்டியன் (30), தத்தனூா் குடிக்காடு சுப்பிரமணியன் (55), சுத்தமல்லி நக்கீரன் (43) ஆகிய மூவரும் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினா் அவா்களைக் கைது செய்து, மூவரிட மிருந்து 97 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதுபோல மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த மீன்சுருட்டி சுண்டிப்பள்ளம் அம்மன் கோயில் தெரு பிரிதிவிராஜனை(30) கைது செய்த காவல்துறையினா், அவரிடமிருந்து 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...