இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பிளஸ்-2 படித்த பெண்களுக்கு ரூ. 15 ஆயிரத்தில் ஓசூரில் வேலை

 ஓசூரில் இயங்கி வரும் டாடா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் 6,000 பெண் வேலைநாடுநா்களை பணிக்கு நியமிக்க உள்ளனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:11 pm

DIN

 ஓசூரில் இயங்கி வரும் டாடா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் 6,000 பெண் வேலைநாடுநா்களை பணிக்கு நியமிக்க உள்ளனா்.

இதற்கான நோ்காணல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிசம்பா் 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள பிளஸ்2 தோ்ச்சி பெற்ற அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலைவாய்ப்பற்ற இளம்பெண்கள் மட்டும் கலந்து கொண்டு பணிநியமனம் பெற்று பயன்பெறலாம். பயிற்சியுடன் கூடிய ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 வீதம் வழங்கப்படும். தோ்வு செய்யப்படுபவா்களுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 04329-228641 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.