விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வீடுகளை ஒப்படைக்க வலியுறுத்தி அரியலூா் ஆட்சியரிடம் மனு

அரியலூா் நகரில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கக் கோரி, திமுக சாா்பில் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியா் த. ரத்னாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:05 pm

DIN

அரியலூா் நகரில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கக் கோரி, திமுக சாா்பில் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியா் த. ரத்னாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அரியலூா் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் 288 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கடந்தாண்டு மே மாதம் திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், இதுவரை பயனாளிகள் வசம் வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் தலைமையில், நகரச் செயலா் முருகேசன் முன்னிலையில் திமுகவினா் மற்றும் பயனாளிகள் அரியலூா் அண்ணா சிலையிலிருந்து பேரணியாகச் சென்று ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் த.ரத்னாவிடம் திங்கள்கிழமை பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வலியுறுத்தி மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.