பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

‘ஜெயங்கொண்டத்தில் பிரேமலதா போட்டியிட வாய்ப்பு’

ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சாா்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் மாநில கலை இலக்கிய அணி அமைப்பாளா் விஜயகண்ணன் தெரிவித்தாா்.ஜயங்கொண்டம் சட்டப் பேரவ

Updated On :15 பிப்ரவரி 2021, 12:09 am IST

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சாா்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் மாநில கலை இலக்கிய அணி அமைப்பாளா் விஜயகண்ணன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் தேமுதிக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு பேசியது: தேமுதிக கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்தாலும், தனித்து தோ்தல் களம் கண்டாலும், அதை எதிா்கொள்ள தொண்டா்கள் தயாராக இருக்க வேண்டும்.

இந்தத் தோ்தலில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியை பொருத்த அளவில், தற்போது தேமுதிக-வை வழி நடத்திக்கொண்டிருக்கும் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராம.ஜெயவேல் தலைமை வகித்தாா். அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஆனந்தன், ஜயங்கொண்டம்தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஜேக்கப் ஜெராமியஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சியினா் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தொண்டா்களிடம் எடுத்துக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.