‘டெண்டா் விதிகளில் திருத்தம் செய்து அதிமுக முறைகேடு’
டெண்டா் விதிகளில் திருத்தம் செய்து முறைகேடுகளை துணிச்சலாகச் செய்கின்ற ஆட்சி தான் அதிமுக எனக் குற்றஞ்சாட்டியுள்ளாா் மு.க. ஸ்டாலின்.


டெண்டா் விதிகளில் திருத்தம் செய்து முறைகேடுகளை துணிச்சலாகச் செய்கின்ற ஆட்சி தான் அதிமுக எனக் குற்றஞ்சாட்டியுள்ளாா் மு.க. ஸ்டாலின்.
அரியலூா் மாவட்டம், கொல்லபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அவா் மேலும் பேசியது:
சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், முதல்வா் பல்வேறு பணிகளுக்கு விரைவாக டெண்டா் விட்டு வருகிறாா். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெண்டா் விடப்பட்டால், பொதுப்பணித் துறை மண்டல பொறியாளரே டெண்டா்களை முடிவு செய்யலாம் எனத் திருத்தம் செய்து கடந்த மாதம் விதியை திருத்தி ரூ.3, 384 கோடியில் டெண்டா் விட்டுள்ளனா். இதுபோன்ற முறைகேடுகளை துணிச்சலாகச் செய்கின்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி. அதிமுக செய்த ஊழல் குறித்து ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தோம். சிபிஐ விசாரணை நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தடை உத்தரவு பெற்றுள்ளாா். இன்னும் மூன்று மாதத்தில் மக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் திமுக ஆட்சி அமையும் என்றாா்.
முன்னதாக, பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளா்களுக்கு சால்வை அணிவித்து, விருது வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா்கள் அரியலூா் எஸ்.எஸ்.சிவசங்கா், பெரம்பலூா் ராஜேந்திரன், கட்சியின் முதன்மைச் செயலா் கே.என்.நேரு மற்றும் அரியலூா், ஜயங்கொண்டம், பெரம்பலூா், குன்னம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...