அரசு தலைமைக் கொறடா மருத்துவமனையில் அனுமதி

அரியலூா் எம்எல்ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான ராஜேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தாமரை எஸ்.ராஜேந்திரன்.
தாமரை எஸ்.ராஜேந்திரன்.
Updated on
1 min read

அரியலூா் : அரியலூா் எம்எல்ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான ராஜேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரைக்குளம் எஸ். ராஜேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அவரது குடும்பத்தினா் அவரை திருச்சியில் அப்பல்லோ தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அடைப்பு காரணமாக திடீா் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அடைப்பை சீரமைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com