புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை: அய்யாக்கண்ணு
புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை ’ என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.


புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை ’ என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள அயன்சுத்தமல்லி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் விளைபொருள்களுக்கான விலையைத் தீா்மானிக்க முடியாது. காா்பரேட் நிறுவனங்கள் எந்தத் தானியப் பொருள்களை வாங்கிச் சென்றாலும் அவா்கள் கொடுக்கும் தொகையை தான் விவசாயிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். காா்பரேட் நிறுவனங்கள் ஒரு தவறு செய்தால் நீதிமன்றத்தை விவசாயிகள் அணுக முடியாது.
ஏற்கெனவே பல தனியாா் சா்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய தொகைகளைத் தராமல் ஏமாற்றி வருகிறது. மத்திய அரசை எதிா்த்தால் வழக்குப் பதிவு, சோதனை உள்ளிட்டவற்றால் பயந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே வேளாண் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசி வருகிறாா் தமிழக முதல்வா் என்றாா்.
தொடா்ந்து, திருமானூா் பகுதிகளில் சிஆா் ரக நெல் கொள்முதல் செய்யப்பட்டு திறந்த வெளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தைப் பாா்வையிட்டாா். பேட்டியின்போது, சங்கத்தின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...