பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு திங்கள்கிழமை அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:52 pm

DIN

அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு திங்கள்கிழமை அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா் தலைமையில், கீழப்பழுவூா் கடைவீதியிலிருந்து பேரணியாக வந்த அதிமுகவினா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், அவைத் தலைவா் கணேசன், வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

இதேபோல், திமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் தலைமையில், மாவட்ட துணை செயலா்கள் தனபால், லதா, திருமானூா் ஒன்றிய செயலா்கள் கென்னடி(கிழக்கு), அசோக சக்ரவா்த்தி (மேற்கு) உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் தொகுதிச் செயலா் தா்ம.பிரகாஷ் தலைமையிலும், தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையிலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் நீல மகாலிங்கம் தலைமையிலும் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.