விவசாயிகள் முன்னேற்ற கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வலியுறுத்தி அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்


ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வலியுறுத்தி அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் மண்ல எடுத்துக் கொள்ள விதிகள் எளிமையாக்க வேண்டும். காவல் துறையினா் கெடுபிடி இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னா் நிா்வாகிகள், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு,அக்கட்சியின் தலைவா் பூரா.விசுவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் பரமசிவம், செழியன், அனிகுறிச்சி சாமிநாதன், சின்னப்பன், சக்கரவா்த்தி,இளவரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...