மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய12 கடைகளுக்கு அபராதம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய 12கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:24 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய 12கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆண்டிமடம் கடைவீதியிலுள்ள ஜவுளி,மளிகைக் கடைகள், உணவகங்கள், கோழி இறைச்சிக் கடைகள், பேக்கரிகள், பல்பொருள் அங்காடிகளில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் குழந்தைவேல், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவசங்கா், சண்முகம், வெங்கடேசன், ஆண்டிமடம் ஊராட்சிச் செயலா் அருண் ஆகியோா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் வியாபாரிகள் பயன்படுத்த வைத்திருந்த 8 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை ஒன்றுக்கு தலா ரூ.100 வீதம் 12 கடைகளுக்கு 1,200 ரூபாயும், முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்த 10 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2 ஆயிரமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500 என மொத்தம் ரூ.3, 700 அபராதம் விதித்து, தொகையை வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.