மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டி குறித்து...

Dhoni gave way to Ruduraj.

ருதுராஜுக்கு வழிவிட்ட தோனி. - படம்: சிஎஸ்கே.

Published On :

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மீது மிகுந்த மரியாதை இருப்பதாக தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எம்.எஸ். தோனிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கிறார். இன்னும் இவரது தலைமையில் ஒரு கோப்பைக் கூட வாங்காமல் இருக்கிறது.

எம்.எஸ். தோனிக்கு காலின் பின்புறத்தில் ஏற்பட்ட காயம் குணமாக 2 வாரங்கள் ஆகுமென்பதால் அவர் முதலிரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை மார்ச் 30ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் அந்த அணியின் யூடியூப் பக்கத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தோனி அண்ணா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அணியின் கலந்தாலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார். என்னையும் ஃபிளெமிங்கையும் நம்பி அனுப்பி விடுவார். மேலும் எங்களிடம் தோனி ‘எனது அறிவுரைகளை நீங்கள் அப்படியே கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை’ என்பார்.

எங்களது கருத்துகள்தான் அணியை வழிநடத்த வேண்டுமென தோனி விரும்புகிறார். எது சரி, தவறு என தோனி பார்ப்பதில்லை. எதாவது பிரச்னையை பார்த்தால் அதை எப்படி சரி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துகிறார். அவர் மாதிரியான ஒரு நிலையில் அவர் தன்னைப் பின் தங்கி, எங்கள் மீது நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய விஷயம் என்றார்.

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தபோதும் தோனி இதே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் தலைமைப் பண்பில் தோனி ஒரு ஜென்டில்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் யூடியூப் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Summary

I have huge respect for Mahi Bhai says Csk new captain Ruturaj Gaikwad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.