அதிக பாரம் ஏற்றி வந்த7 லாரிகளுக்கு அபராதம்
அரியலூா் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 லாரிகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


அரியலூா் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 லாரிகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு, லாரிகளில் அதிக பாரத்துடன் பொருள்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரியலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பெரியசாமி மற்றும் கீழப்பழுவூா் போலீஸாா் புதன்கிழமை மாலை கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே அதிக பாரம் ஏற்றி வந்த 7 லாரிகளை சோதனை செய்து பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனா். இதையடுத்து லாரிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...